திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை பார்த்து தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அடைந்த தோல்வியை அதிமுகவும்-பாஜகவும் மறக்காது என கூறினார்.