பள்ளிகளில் திட்டமிட்டபடி நாளை 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 98 சதவித மாணவர்கள் பள்ளிகளுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.