செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

'அவள் இல்லையென்றால், நீ வா!'- பாபநாசம் படம் போல சிறுமியின் தாயையும் அழைத்தவனை 2 மணி நேரமா விஷேசமாக கவனித்த எஸ்.பி

Feb 08, 2021 02:00:16 PM

ராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம் விஷேசமாக கவனித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தன்னுடைய மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஒரு மகனும் உள்ளார். தாயும், அண்ணனும் வேலைக்கு சென்று விட, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்வற்றில் மாணவி தன் பெயரில் பக்கங்களை ஏற்படுத்தி தன்னுடைய புகைப்படம்,குடும்ப புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதற்கிடையே, மாணவியின் தாயின் வாட்ஸ் - அப் வாய்ஸ் மெசேஜில் மாணவியை கொச்சையான வார்த்தைகளால் திட்டி சிறுமியின் நிர்வாண போட்டோவை ஒருவன் அனுப்பி வைத்துள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து மாணவியிடத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது, தாயிடத்தில் மாணவி அழுதபடி கூறிய தகவல்கள் அதிர்ச்சி ரகமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா விழுப்பனூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவனுடன் பேஸ்புக்கில் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவன் , சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தில் மின்சார வாரியத்தில் பணி புரிகின்றான். முதலில் அண்ணன் போல பழகிய தமிழ்செல்வன் நாளடைவில் மாணவியை காதலிப்பதாக கூறயிருக்கிறான்.  காலபோக்கில் அவனை முழுமையாக நம்பிய மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தின் பாஸ்வோர்டுகளை கொடுத்துள்ளார்.

பின்னர், ஒரே ஒருமுறை நான் உன்னை நான் நிர்வாணமாக பார்க்க வேண்டுமென்று கூறி மாணவியை தமிழ்செல்வன் கட்டாயப்படுத்தியுள்ளான். விவரம் அறியாத மாணவியும் வீடியோகாலில் தமிழ்செல்வன் கூறியபடி பேசியுள்ளார். இதை , தமிழ்ச்செல்வன் ரிக்கார்ட் செய்துள்ளான்.  ஒரு கட்டத்தில், ' நீ என்னிடத்தில் நடந்தது போலத்தான் மற்ற ஆண்களிடமும் நடந்து கொள்வாய்' என்று மாணவியை துன்புறுத்தியுள்ளான். உன்னுடைய அழகை என் நண்பர்களும் ரசிக்கட்டும் என்று கூறி தன் நண்பர்களுக்கும் , சிறுமியின் தாய்க்கும் மாணவியின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளான்.

அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு , 'என் மகளை விட்டு விடு' என்று "பாபநாசம்"படத்தில் நடிகை கௌதமி கெஞ்சியது போல கெஞ்சியுள்ளார். அப்போது, 'நீயும் நிர்வாணமாக வீடியோ கால் பேச வேண்டும்' என்று தமிழ் செல்வன் மிரட்டியுள்ளான். இதனால், பயந்து போன சிறுமியின் தாயும் , மகனும் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், 4 நாள்களாக வழக்குப்பதிவு செய்யவில்லை. தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசை நேரில் சந்தித்து தாயும், மகளும் , மகனும் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், மாணவியின் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் பக்கங்களை ஆராய்ந்தார். அப்போது, மாணவிக்கு நடந்த கொடுமைகள் பற்றி தெரிந்து கொண்டார். உடனடியாக, தனிப்படை அமைத்து அன்றிரவே தமிழ் செல்வனை தூக்கினர். தமிழ்செல்வனிடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேஷ் நேரடியாக விசாரித்தார். அப்போது, கவல்துறை கண்காணிப்பளரிடத்திலேயே தெனாவட்டாக பேசிய தமிழ் செல்வன், ' உன்னால் முடிந்ததை பார் ' என்று திமிர் காட்டியுள்ளான் இதனால், கடுப்பான காவல்துறை கண்காணிப்பாளர் தன் அலுவலகத்தில் வைத்தே அவனை 2 மணி நேரம் விசேஷமாக கவனித்து தமிழ்செல்வனின் திமிரை அடக்கியுள்ளார்.

பின்னர், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலை ஆய்வாளர் இந்திராவிடம் சக்தி கணேஷ் வழக்கை ஒப்படைத்தார். ஆனால், தமிழ்செல்வனை மாப்பிள்ளை போல் கவனித்த மகளிர் போலீஸார், விசாரணை என்ற பெயரில் அந்த மாணவியை தகாத வார்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். போலீஸாரின் துன்புறுத்தல் குறித்து மாணவி அழுதபடியேதாயிடம் கூறவே, ' எங்களுக்கு வழக்கே வேண்டாம்; ஆளை விடுங்கள்' என்று காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடத்தில் போனில் அழுதுள்ளனர். இதனால், கோபமடைந்த காவல் கண்காணிப்பாளர் ராசிபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராவுக்கு செம டோஸ் விட்டார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி, காவல் கண்காணிப்பாளரின் நேரடி உதவியாளர் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றனர். இதையடுத்து, 30 நிமிடங்களில் தமிழ் செல்வன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்செல்வன் ராசிபுரம் கிளைச் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

பெற்றோர்களை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கு போன் வாங்கிக் கொடுப்பது சரிதான்... ஆனால், அந்த செல்போனை குழந்தைகள் முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிப்பதே சாலச்சிறந்தது.


Advertisement
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement