பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை, பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அரை கிலோ எடை கொண்ட லேமினேட்டட் டின் பஞ்சாமிர்தம், சுவாமியின ராஜ அலங்கார புகைப்படம் மற்றும் கோயிலில் இயற்கையாக தயார் செய்யும் விபூதி ஆகியவற்றை அஞ்சலக துறையின் இ பேமண்ட் வழியாக 250 ரூபாய் கட்டணத் தொகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லும் நடைமுறையை செயல்படுத்திட, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.