தருமபுரி சிப்காட்டை விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைப்பார் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதிலும், சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளதாகவும், அவை விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறினார்.