சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.
330 அரசு மருத்துவக்கல்லூரி இடங்களில் 50 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும், 280 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் வருகிறது.
இது தவிர நிர்வாக ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு என மொத்தமாக 1,594 இடங்களுக்கு கலந்தாய்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இதற்காக 4611 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 119 அரசுப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். கலந்தாய்வில் 82 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவுள்ளது.