மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தால் தமிழகத்தில் இளைஞர்கள் 11, 655 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக அவர்களில் 5692பேர் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராம கெளசல்யா யோஜனா என அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை பேருக்கு திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், தூத்துக்குடி மாவட்த்தில் இளைஞர்கள் 300 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் 169 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.