மறைந்த முதலமைச்சர்கள் அனைவரின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சமுதாயத்துக்குப் பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதலமைச்சர்கள், தலைவர்களின் வீடுகளைக் கையகப்படுத்தி நினைவு இல்லங்கள் அமைப்பது புதிதல்ல என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இன்னும் எவ்வளவு காலத்துக்கு நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள் என வினவினார். தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.