செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எமனுடன் 7 மணி நேரம்... நான் செத்து பிழைச்சவன்டா! - சிறுத்தையிடமிருந்து தப்பிய நாய்

Feb 05, 2021 07:30:33 AM

கர்நாடகத்தில் சிறுத்தையுடன் கழிவறையில்   சிக்கிய தெருநாய் 7 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 

தக்ஷின கர்நாடக மாவட்டத்திலுள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணியளவில் சிறுத்தை ஒன்று தெரு நாயை விரட்டி வந்துள்ளது.சிறுத்தையிடமிருந்து தப்பிக்க நாய் ஒரு வீட்டை ஒட்டியிருந்த கழிவறைக்குள் புகுந்தது. ஆனாலும், விரட்டி சென்ற சிறுத்தை கழிவறைக்குள் புகுந்தது. இந்த சமயத்தில் கழிவறைக்குள் வந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே சிறுத்தையின் வால் தெரிந்ததை பார்த்து சுதாரித்துக் கொண்டார். உடனடியாக, கழிவறையின் கதவை அடைத்து விட்டு கூச்சல் போட்டார். தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தனர். முதலில் , கழிவறையின் மேல் கூரை அகற்றப்பட்டு சுற்றிலும் வலை போடப்பட்டது. இதற்கிடையே, தங்களது நடவடிக்கையால் சிறுத்தை கோபமடைந்து நாயை அடித்து சாப்பிட்டு விடும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கழிவறைக்குள் மாட்டிக் கொண்டதால் சிறுத்தையும் பயந்து போய் இருந்தது.

இதனால், நாயை தாக்க சிறுத்தை முனையவில்லை. கழிவறையின் ஒரு மூலையில் நாயும் மற்றோரு பகுதியில் சிறுத்தையும் படுத்துக் கொண்டிருந்தன. பின்னர், ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் மீதேறி வனத்துறை அதிகாரிகள் மதியம் 2 மணியளவில் சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டனர். அந்த தருணத்தில் துள்ளிய சிறுத்தை வலையில் மாட்டிக் கொண்டது. பிறகு, அதை மீட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டில் விட்டனர். நாய் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. சிறுத்தையுடன் ஒரே அறையில் 7 மணி நேரம் இருந்த நாய்க்கு நான் செத்து பிழைச்சவன்டா என்ற பாடல் வரிகள் நிச்சயமாக பொருந்தும்.

 


Advertisement
போலீஸ் வந்தபிறகே POSH குழுவில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிந்தது - அமைச்சர்.. காவல் ஆணையர் தகவலுக்கு முரணான அமைச்சர் விளக்கம் என புகார்
டிச.28 விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு விஜய்க்கு அழைப்பு..
3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்த மதுரை அரசு மருத்துவமனை.. ரூ.16 கோடியில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டதாக தகவல்..
இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது.. 18 பைக்குள் பறிமுதல்..
மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 30 பேருக்கு மேல் காயம்
வயலூர் முருகன்கோயிலில் பிப்.19ஆம் தேதி கும்பாபிஷேகம்- அமைச்சர்
தமிழக போலீசாருக்கும் உ.பி சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கும் இடையே மோதல்
நீலகிரியில் புல்லட் என பெயரிடப்பட்டுள்ள காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்
உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் திரும்ப ஒப்படைக்கப்படுமா?.. அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 2 சுடுமண் பானைகள், மூடிகள் கண்டெடுக்கப்பு

Advertisement
Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பணத்தை திருப்பி கேட்பியா..? முன்னாள் காதலிக்கு ஸ்கெட்ச் காரை ஏற்றிய அதிர்ச்சி காட்சிகள்..! சீட்டிங் லவ்வர் பாய் கைது

Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அதெப்படி ஏரோபிளேன் மோடில் இருந்தால் செல்போன் அழைப்பு வரும் ? மாணவி சொன்ன அந்த சார் யாரு ? புலன் விசாரணையில் அம்பலமாகுமா ?

Posted Dec 27, 2024 in வீடியோ,Big Stories,

“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!


Advertisement