தமிழ்நாட்டில் புதிதாக, 510 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 521 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சிவகங்கையை சேர்ந்த 83 வயது முதியவர் உள்பட ஒரே நாளில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் 142பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
பெரம்பலூரில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.