குன்றத்தூர் அருகே குடிபோதையில் லாரியை ஓட்டிய ஓட்டுநரால் மூவர் உயிரிழந்த நிலையில் போலீசார் முன்னிலையிலேயே உறவினர்கள் ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சாலையின் இரு பகுதிகளும் நடுவே உள்ள காலியிடத்தில் செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான பெண்கள் லோடு ஆட்டோ மூலம் சாலையோரம் குன்றத்தூர் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளம் தோண்டி செடியை நடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்போது, பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் நோக்கி விரைவாக சென்ற சரக்கு வாகனம் மரம் நட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டி யானை லாரி தூக்கி வீசப்பட்டது. கூட்டத்தில் புகுந்ததில்த வயலா நல்லூரைச் சேர்ந்த பச்சையம்மாள்(45), செஞ்சி லட்சுமி(57), சுகந்தி(40), ஆகியோர் பரிதாபமாக இறந்து போனார்கள்.
இதில் பச்சையம்மாள், செஞ்சுலட்சுமி இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். சுகந்தி காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் இறந்து போனார். விபத்தையடுத்து ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர் .
உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு குடிபோதையில் இருந்த லாரி டிரைவரை போலீசார் முன்னிலையிலேயே போலீஸ் வாகனத்தில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள்/ இதையடுத்து . போலீசார் அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர் பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் சாலையின் ஓரம் செடிகள் நட்ட தாலும் குடிபோதையில் லாரியை டிரைவர் இயக்கியதும் விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.