சார்ட்டட் அக்கவுண்டன்ட் எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துச் சாதித்துள்ளார்.
கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்ன முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிராஜ் என்ற அந்த மாணவன், 800க்கு 553 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒன்றரை ஆண்டு கடுமையான உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்திருப்பதாக மாணவர் இசக்கிராஜ் தெரிவித்துள்ளார்.