நெல்லை அருகே புறவழிச்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை, இரவு 10 மணிக்கு மேல் திறக்கவேண்டும் என்று தனிப்பிரிவு போலீசார் சிலர் தகராறில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில், திருச்செந்தூர் -திசையன் விளை புறவழிச்சாலையின் சுங்கச்சாவடி அருகே டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது.
டாஸ்மாக் கடையில், மீரான், பொன்னுதுரை மற்றும் கணேச ராஜா ஆகிய மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு இரவு 10 மணிக்கு, கடையை மூடிவிட்டு மூவரும் கிளம்பினர்.
அப்போது, அங்கு வந்த நாங்குநேரி தனிப்பிரிவைச் சேர்ந்த போலீசார் சிலர் டாஸ்மாக் கடையைத் திறக்குமாறு கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் மூவரும் கடையைத் திறக்க மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த போலீசார், ஊழியர்கள் மூவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மூவரும் தங்கள் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பணியாளர்களின் உறவினர்கள், படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்