தமிழகத்தில் கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் - ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கைவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று, இம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக செய்திக் குறிப்பு ஒன்றில், அவர் தெரிவித்து உள்ளார்.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு என்றும் புறந்தள்ளியது கிடையாது என்றும், இந்த நல்ல முடிவை ஏற்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக பணி ஆற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.