நாகப்பட்டினத்தில் 29 ஆயிரத்து 360 கோடி ரூபாய் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் அமைக்க உள்ளது. அதன் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
9 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் கொண்ட ஆலையை அமைப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. நிதி ஆயோக்கின் ஒப்புதலுக்குப் பிறகு இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நாகை கடலையொட்டி 650 ஏக்கர் நிலம் இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு துணை அமைப்பான சென்னைப் பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ளது. அங்கு ஏற்கனவே ஒரு மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிக்கும் பணி செயல்பட்டு வருகிறது.