கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இது குறித்த பொதுநல வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3-ம் கட்ட பரிசோதனை நடந்து கொண்டிருக்கும் போதே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட மனுதாரர், தடுப்பூசிகளின் பாதுகாப்பு, செயல் திறன் குறித்த தரமதிப்பாய்வு செய்யப்படாமலும், நெறிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியிருந்தார்.
விசாரணையில் நிபுணர் குழு அமைத்து அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில் எதன் அடிப்படையில் தடை கேட்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரர் விரும்பாவிட்டால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருந்து கொள்ளலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.