நீலகிரி மாவட்டம் மசினகுடியில், யானைக்கு தீவைத்து கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, 41 தனியார் தங்கும் விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைக்குத் தீ வைத்த சம்பவத்தை அடுத்து, உரிமம் இன்றி தங்கும் விடுதி நடத்தி வந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசெண்ட் திவ்யா உத்தரவின்பேரில், மசினகுடி தனியார் தங்கும் விடுதிகளில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 41 தனியார் தங்கும் விடுதிகள் உரிமம் இன்றி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து,15 நாட்களுக்குள் காலி செய்யவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.