தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 21 சதவீதத்திற்கும் குறைவான சுகாதாரப் பணியாளர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், அதனை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தானில் 35 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வேகமான முறையில் ஆறே நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறிய ராஜேஷ் பூஷன், தற்போது வரை 25 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.