ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக வியாழக்கிழமை அரசு திறந்து வைக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போயஸ்தோட்ட இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிக பயன்பாட்டுக்காக அல்ல என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை அரசு திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, மக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது என்று ஆணையிட்டார்.