செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திடீரென்று உடைந்த ஏரிக்கரை... ஊருக்குள் காட்டாறாய் பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு!

Jan 28, 2021 10:09:37 AM

பெரம்பலூர் அருகே, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டிய அரசலூர் ஏரியின் கரை உடைந்து, ஏரி நீர் காட்டாறு போல வயல்வெளி மற்றும் ஊருக்குள் புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரசலூர் கிராமத்தில் உள்ளது அரசலூர் ஏரி. அரசலூர் ஏரியை நம்பி சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான வயல்வெளி பாசனம் பெறுகிறது. மேலும், அரசலூர் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் அன்னமங்கலம் ஏரிக்குச் செல்லும்.

இந்த நிலையில், சமீப காலமாகப் பெய்த கனமழை காரணமாக, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அரசலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. உபரி நீர் வெளியேறும் வாய்க்கால்கள் முட்புதர்கள் நிரம்பி இருந்ததால், ஏரிக் கரை உடையும் சூழல் ஏற்பட்டது. இதனால், அரசு அதிகாரிகளை நம்பியிராமல், பொங்கல் பண்டிகையைக் கூட பொருட்படுத்தாமல் அன்னமங்கலம் மற்றும் அரசலூர் கிராம மக்கள் வாய்க்கால்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அரசலூர் ஏரி உடையும் ஆபத்திலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல், அன்னமங்கலம் ஏரியும் நிரம்பியது.

இந்த நிலையில், முழு கொள்ளளவை எட்டி நீர் ததும்ப நின்ற அரசலூர் ஏரிக் கரையிலிருந்து இரண்டு நாட்களாக நீர் கசியத் தொடங்கியது. நீர் கசிவைக் கட்டுப்படுத்த கிராம மக்கள் முயற்சி செய்துவந்தனர். இந்த சூழலில் தான் யாரும் எதிர்பாராத வகையில், அரசலூர் ஏரியின் கரை உடைந்து நீர் காட்டாறு போல வெளியேறியது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அரசலூர் கிராமத்திலிருந்து அன்னமங்கலம், வேப்பந்தட்டை, பாளையூர், தொண்டாப்பாடி வழியாக வேத நதி வழியாக வெள்ளாற்றில் கலந்துள்ளது.

அரசலூர் ஏரியில் ஏற்பட்ட இந்த திடீர் உடைப்பால் கரையோரத்தில் இருந்த சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்வெளி நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நல்ல வேளையாக, அணை உடைப்பில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தகவல் கிடைத்த போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்...


Advertisement
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிகளை மதுரையில் நடத்த ஆலோசனை - அமைச்சர் மூர்த்தி
மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகை கஸ்தூரியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கொடைக்கானல் வந்து செல்லும் பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்.. ஏன்?..
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வர மறுத்த மருத்துவர்கள்!.. பொதுமக்கள் வாக்குவாதத்திற்கு பிறகு தாமதமாக சிகிச்சை

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement