11 ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
விரைவில் ஒன்பதாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா சூழலில் 9 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் ஜனவரி 19ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டுப் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கல்வியாண்டில் இன்னும் சில மாதங்களே உள்ளதால் 9, 10, 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11ஆம் வகுப்புக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
40 விழுக்காடு அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.