திருவாரூரில் டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள், திமுகவினர், கூட்டணிக் கட்சியினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் முகநூல் பதிவில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் திருவாரூரில் டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் குரல் கொடுக்கும் தி.மு.க.வையும் கூட்டணிக் கட்சிகளையும் பொய் வழக்குகள் மூலம் தடுத்துவிட முடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.