தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தலை நடத்தும் இந்த அதிகாரிகள், தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை கவனித்து தீர்ப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்வர்.