ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்க்ஷா மற்றும் தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் நீட் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்த வழக்கில் அவர்களின் ஜாமீன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மருத்துவ கலந்தாவின் போது மாணவி போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் தந்தை மற்றும் மாணவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
விசாரணையில், இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, அவர்களை ஜாமீனில் விடுவித்தால் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.