தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் வருகிற 28ந் தேதி அன்று இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு,புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை காலை நேரத்தில் இலேசான பனிமூட்டம் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.