ஜனவரி 28ஆம் தேதி தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் இலேசான பனிமூட்டம் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.