தமிழகத்தில் பிறக்கவில்லையென்றாலும் நானும் தமிழன் தான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், 2-ம் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மனதின் குரலை பேச வரவில்லை, மக்கள் பிரச்சனைகளை கேட்க வந்ததாக கூறினார்.
இந்தியாவுக்கே வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யும் ஊத்துக்குளி மக்களை நினைத்து தாம் பெருமைப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறினார். ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.