சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் எழுந்து நடக்கிறார் எனவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 97 சதவீதமாக உள்ளதாகவும்,சர்க்கரை அளவு அதிகரிப்பால் அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், அனைத்து சிகிச்சைக்கும் அவர் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என்றும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியுள்ளது.