மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டிலும் ஆள்மாறாட்ட முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரே பதிவு எண்ணில் 2 பேர் போட்டியில் பங்கேற்று முறைகேடாக பரிசு பெற்றதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 காளைகளைப் பிடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கருப்பாயூரணி கார்த்திக் 16 காளைகளை மட்டுமே பிடித்ததாகவும் மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்காமல் வேறு ஒருவரின் பனியனை அணிந்து வந்து அவர் போட்டியில் பங்கேற்றதாகவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.