புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வந்தடைந்த மீனவர்களின் உடல் 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 18ம் தேதி இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மீனவர்களின் உடல் இன்று காலை சர்வதேச கடல் எல்லையில் இந்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து விசைப்படகு மூலம் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட மீனவர்களின் உடல், அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பொருட்டு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.