தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள குழு நேர்மையான முறையில் விசாரணை நடத்தும் என்று நம்பிக்கை உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.