நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் இந்திய படையிடனரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 18ஆம் தேதி கோட்டைபட்டிணத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர்.
உடற்கூராய்வு முடிந்த நிலையில், மீனவர்கள் உடல்கள் இன்று இந்திய படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மீனவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.