பேரறிவாளன் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது ஆளுநர் முடிவெடுக்க தாமதம் ஆவதால், தன்னை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதிமன்றத்தில், பேரறிவாளன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.