காவல் நிலையத்தில் தலைமைக் காவலர்களுக்காக தனிப்படை அமைக்க தடை கோரிய வழக்கில் உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மனுவில், காவல் நிலையங்களில் உள்ள போலீசாரை தனிப்படை பணிக்கு ஒதுக்குவதால், ஓய்வு எடுக்க கூட நேரமின்றி மன உளைச்சலில் உள்ள போலீசார் விசாரணைக்காக வருபவர்களை கடுமையாக தாக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.
மன உளைச்சலால் காவலர்கள் ஒருசிலர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ள மனுதாரர், தனிப்படை போலீசாருக்கான விதிகளை உருவாக்க தமிழக அரசு, காவல்துறை டி.ஜி.பி., ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அடங்கிய அமர்வு,விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.