செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பள்ளி கட்ட லண்டனில் இருந்து வந்த இரும்பு... செதுக்கிய பிரிட்டிஷ் பெண்; வெளியே பளீர்... உள்ளே?

Jan 22, 2021 10:54:16 AM

ஆங்கிலேயேர்களால் கட்டப்பட்டு, நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் சிதிலமடைந்து காணப்படும் அரசுப் பள்ளியை, பழமை மாறாமல் மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பண்டைய மன்னர்கள், ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என்று இந்தியாவை ஆட்சி செய்த பலராலும் பல்வேறு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பல பாரம்பரிய கட்டிடங்கள் இன்றும் சிறப்பாய் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆங்கிலேயர்களால் 1922-ம் ஆண்டு கட்டப்பட்டு நூற்றாண்டை எட்டியுள்ள சென்னை லேடி வில்லிங்டன் பள்ளியோ சிதிலமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் பார்ப்பதற்கே பரிதாபமாய் காட்சியளிக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையின் மெரினா கடற்கரையோரங்களில் வசித்த ஏழை - எளிய மக்கள், மீனவ மக்களின் பிள்ளைகளின் கல்விக்காக திருவல்லிகேணியில் கட்டப்பட்டது தான் லேடி வில்லிங்டன் பள்ளி. சுண்ணாம்பு மற்றும் மணல் கலந்து கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் லண்டனில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட இரும்புத் தூண்களைப் பயன்படுத்தி தரையில் இருந்து 40 அடி உயரத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பர்மா தேக்குமரக் கட்டைகளால் ஆன படிக்கட்டுகள், பலகைகள், மேசைகள் நாற்காலிகள் மற்றும் ஜன்னல் கதவுகள் ஆகியவை உள்ளன. அழகிய வேலைப்பாடுடனான கூட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்ட என்சைக்ளோ பீடியா, அட்லஸ் மேப் உள்ளிட்ட மிக பழமையான தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள், வரலாற்று நூல்கள் போன்றவை உள்ளன.

மேலும், பள்ளியைக் கட்டிய வில்லிங்டன் சீமாட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில் "W" வடிவில் இந்த பள்ளி கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பள்ளியின் தனி சிறப்பு. தற்போதும் அவரின் பெயரிலேயே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாகவும் நூற்றாண்டை நெருங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

1922-ம் ஆண்டிலேயே LKG வகுப்புடன் தொடங்கப்பட்ட பள்ளி, சென்னையில் உள்ள பிற ஆங்கிலேயர் காலத்து கட்டிடங்களான ரிப்பன் பில்டிங், ஜார்ஜ் கோட்டை போன்றவற்றின் ஒத்த வடிவமைப்பை உடையது என்றும் இந்த பெருமிதம் கொள்கிறார் இந்த பள்ளியில் 35 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் சீனிவாசன்.

இத்தகைய பல்வேறு பெருமைகளையும், வரலாற்றையும் சுமந்து நிற்கும் பள்ளி இன்று சிதிலமடைந்து அரிய நூல்களெல்லாம் செல்லரிக்கும் நிலையில் காணப்படுகிறது. பள்ளியை மீண்டும் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க அரசோடு இணைந்து முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களும் உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


Advertisement
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..
போலி பத்திரம் வைத்து நில மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்..
புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாளையொட்டி வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள்..
கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் - 2 பேர் கைது
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement