கல்லூரி முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கலை - அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், கல்வியியல் மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும், வகுப்புகள் தொடங்கப்படும் போது, விடுதிகளில் தங்கவைப்பதிலும் பிரச்சனை எழா வண்ணம் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் கூறினார்.
ஒரு நாள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், அடுத்த நாள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா, சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.