மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 3வது நாளாக நீடித்து வருகிறது.
பால் தினகரன் வீடு, ஜெபக் கூட அலுவலகங்கள், காருண்யா பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கல்வி நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் ஜெபக் கூட்டங்கள் மூலம் வரக்கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
பால் தினகரனின் வெளிநாட்டு முதலீடுகள், இந்திய முதலீடுகள் குறித்தும் அது தொடர்பான பண பரிவர்த்தனை ஆவணங்களும் சிக்கியதாக சொல்லப்படுகிறது.
கனடாவில் உள்ள பால் தினகரனை வரவழைத்து விசாரிக்கவும் வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.