தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் வாங்கும் மதுவிற்கு உரிய ரசீது வழங்கவும், விலைப்பட்டியல் வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில், விற்கப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யப்படுவதாகவும், போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், விலை நிர்ணயம், முறைப்படுத்துதல் தொடர்பாக விதிகள் இருப்பினும் அவை அமல்படுத்தப்படுவது போல் தெரியவில்லை எனக் குறிப்பிட்டனர்.
விற்கும் மதுவிற்கு ரசீதும், மதுபானக்கடைகளில் விலைப்பட்டியலும் இல்லை என்றால் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.