பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹேரன்பால் ஆகிய மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்தததை அடுத்து, காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, அவர்கள் மூவரையும் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடபப்ட்டது. இதனிடையே, கைது செய்யபட்ட மூவருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதிகோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.