சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிவாஜி நகர் போரிங் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இணை நோய்களுடன் இருமல் மற்றும் காய்ச்சலுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் 79 சதவீதம் ஆக்சிஜன் இருப்பதாகவும், தொடர்ந்து சசிகலாவின் உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.