மேட்டுப்பாளையத்தில் இரை தேடி தனியார் கல்லூரிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளதால் அப்பகுதியில் பல அரிய வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரிக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இரை தேடிப் புகுந்தது. தன்னார்வலர் ஒருவரால் மீட்கப்பட்ட மலைப்பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த மலைப்பாம்பை காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.