தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதிவாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 6 கோடியே 26 இலட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2021 ஜனவரி முதல் நாளைத் தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்தபின் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண்கள். ஆண் வாக்காளர்களைவிட 9 லட்சத்து 90 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர். அதிகப்பட்சமாகச் சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 34 லட்சத்து 98 ஆயிரத்து 829 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவாக அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 25 வாக்காளர்கள் உள்ளனர். சட்டமன்றத் தொகுதி அளவில் அதிகப்பட்சமாகச் சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவாகச் சென்னைத் துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் முதன்முறையாக வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.