தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும், காணொலி வாயிலாக அவரிடம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே ஒரு முறை ஆணையத்தில் ஆஜராகி அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று தனது 24-வது கட்ட விசாரணையை துவங்கிய ஒரு நபர் ஆணையம், மீண்டும் ஆஜராகுமாறு ரஜினிக்கு அனுப்யிருந்தது. ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி நேரில் ஆஜராகினார்.