திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் பாண்டமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கவர்னரிடம் புகார் மனு அளிப்பதை மட்டுமே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் ஒரு சாமானிய விவசாயி முதலமைச்சராக உள்ளதாகத் தெரிவித்தார்.