தமிழக எல்லைக்குள் புகுந்து தமிழ் பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தி வரும் வட்டாள் வகையறாக்களுக்கு மத்தியில் நன்கு படித்த கன்னட இளைஞர் ஒருவர் திருக்குள் புகழை பரப்பி வருகிறார்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பிறந்து வளர்ந்த லுாகாஸ், என்ற இளைஞர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். ஓசூர் அருகேயுள்ள சின்ன எலசகிரியில் தன் மனைவி வின்ஸி கிளாராவுடன் லுாகாஸ் வசித்து வருகிறார். இவர், தன் மனைவி வின்சி கிளாராவிடமிருந்து தமிழ் மொழியை எழுத படிக்க கற்றுக் கொண்டார். திருக்குளை படித்து அதன் அருமை பெருமைகளை லுாகாஸ் அறிந்து கொண்டதோடு , திருக்குறள் தொடர்பான ஆற்வறிக்கையும் தயார் செய்து அசத்தினார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, 1,330 திருக்குறளையும், ஐஸ் குச்சிகளில் எழுதியுள்ளார். தன் மனைவி உதவியுடன், கடந்த இரண்டு மாதங்களாக சிரத்தை எடுத்து ஐஸ்குச்சிகளில் 1330 திருக்குறளையும் எழுதி முடித்தார். ஒவ்வொரு குறள் எழுதப்பட்ட பிறகும் அதில் உள்ள எழுத்துக்கள் எத்தனை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய திருக்குறள் மீதான காதல் பற்றி லுாகாஸ் கூறுகையில், குறள்களில், 833 மற்றும் 1,304 வது களில் 23 எழுத்துகளே உள்ளதாகவும் அவை மிக சிறிய குறள்கள் என்கிறார் .மேலும், 957, 1,246வதில், 39 எழுத்துகள் உள்ளதால் அவை பெரியவை என்கிறார்.
தமிழ் மட்டுமின்றி, பிற மொழி படங்களில் வரும், திருக்குறள் சார்ந்த வசனங்கள் அடங்கிய, 100 வீடியோக்களை லூகாஸ் சேகரித்துள்ளார். திருவள்ளுவர் படம் பொறித்த 5 ரூபாய் நாணயமும் லூகாஸ் வசம் உள்ளன.
தமிழ் மொழி மீது வெறுப்பு கொண்டு தமிழில் எழுதப்பட்ட பெயர்பபலகைகளை அழித்தால் தமிழின் புகழ் மங்கி விடுமா... வட்டாள் வகையாறாக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.