செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தனக்கு தானே ரூ.2 லட்சத்தில் லம்போர்கினி தயாரித்த இளைஞர்... அதிர்ச்சியில் நடிகர் பிரித்விராஜ்!

Jan 19, 2021 09:17:51 AM

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல ஒன்றரை வருட உழைப்பில் கையில் கிடைத்த பழைய பொருள்களை கொண்டு கேரள இளைஞர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் செலவில் லம்போர்கினி போன்றே ஒரு கார் தயாரித்துள்ளார்.

கேரளாவில் நடிகர் பிரித்விராஜ் கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சிரில் பிலிப் ஆகிய இருவர்தான் லம்போர்கினி ஹரிகேன் ரக கார்கள் வைத்துள்ளனர். ஒரு லம்போர்கினி காரின் விலை சுமார் 3.5 கோடி ரூபாய் ஆகும். இடுக்கி மாவட்டம் சேனாபதி குலகொழிச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அனாஸ் பேபிக்கு சிறு வயது முதலே கார்கள் என்றால் பைத்தியம். புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அனாஸ் பேபி 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே சைக்கிள் ஒன்றை மோட்டார் சைக்கிளாக மாற்றி அசத்தி வியப்பை ஏற்படுத்தினார். பாலக்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ படித்த அனாஸ் பேபிக்கு மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.ஆனால், தன் லம்போர்கினி கார் தயாரிப்புக்காக வேலையை விட்டு விட்டு சொந்த ஊர் வந்து விட்டார்.

இதற்கிடையே, 2018 - ஆம் ஆண்டு கேரளாவின் பெரு வெள்ளத்தில் அனாஸ் பேபியின் வீடு முற்றிலும் இடிந்து விட்டது. அவரின் தந்தையும் இறந்து போனார். இதனால், குடும்பத்தை சுமக்கும் பாரம் அனாஸின் தோள்களில் இறங்கியது. எனினும், தன் லம்போர்கினி கனவில் இருந்து அனாஸ் பின்வாங்கவில்லை. அனாஸின் கார்கள் மீதான பைத்தியத்துக்கு தாயார் மெர்சியும் இளைய சகோதரர் அஜாசும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஒழுங்கா வேலைக்கு போய் உருப்பட பார்' என்று அறிவுரையும் கூறி வந்தனர். ஆனாலும், தனக்கு சொந்தமாக லம்போர்கினி தயாரிக்கும் ஆர்வத்தில் இருந்து மட்டும் அனாஸ் பின்வாங்கி விடவில்லை. சொந்த ஊரில் கிடைத்த வேலைக்கு அனாஸ் பேபி செல்வார். சில நேரங்களில் தச்சு தொழில் சில நேரங்களில் சமையல் தொழில் என சென்று தன் லம்போர்கினி தயாரிக்க பணம் சேர்த்தார். அதே வேளையில், குடும்பத்தையும் நன்றாகவே பார்த்துக் கொண்டார்.


இதற்கிடையே, கேரளாவில் முதன் முறையாக லம்போர்கினி காரை நடிகர் பிரித்விராஜ் வாங்கியத் தகவல் அனாஸ் பேபிக்கு கிடைத்தது. இது, அனாஸ் பேபிக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. பிரித்விராஜ் வாங்கிய காரைப் போன்றே ஆலுவாவில் உள்ள ஒரு ஷோரூமுக்கு சென்று லம்போர்கினி காரைநன்றாக ஆராய்ந்தார். பின்னர், யூடியூப்பில் லம்போர்கினி தயாரிக்கும் முறையையும் பார்த்து தொழில்நுட்பத்தையும் தெரிந்து கொண்டார். முதலில் லம்போர்கினி காரைப் போன்றே முதலில் பேப்பரில் மாடலாக செய்தார்.

பிறகு, பாலக்காடு, திருச்சூர், மங்களூர் போன்ற நகரங்களுக்கு சென்று பழைய கார் உதிரி பாகங்களை சேகரிக்க தொடங்கினார். 110 சிசி. பைன் இன்ஜீன் ஒன்று அவருக்கு கிடைத்ததும் , தன் லம்போர்கினி தயாரிப்பில் தீவிரமாக இறங்கினார். பழைய இரும்பு, பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி அனாஸின் லம்போகினி தயாராக தொடங்கியது. சுமார் ஒன்றை வருட உழைப்பில் அச்சு அசல் லம்போர்கினியே உருவாகி விட்டது. சும்மா இல்லை ஒரிஜினிலில் உள்ள அனைத்து வசதிகளும் அனாஸின் லம்போர்கினியிலும் உண்டு.

ஒரிஜினில் உள்ளது போலவே மேல் நோக்கி திறக்கும் கதவு, காக்பிட் கேபின், பின்பக்க இன்ஜீன், டிஸ்க் பிரேக், பவர் விண்டோ, சன் ரூஃப், காரின் முன்பக்க பின்பக்கங்களில் கேமராக்களுடன் இந்த லம்போர்கினி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை தயாரிக்க வெறும் ரூ. 2 லட்சம்தான் செலவாகியுள்ளது. தற்போது, அனாஸின் வீட்டின் போர்டிகோவை லம்போர்கினி அலங்கரிப்பதை மக்கள் ஆர்வத்துடனும் வியப்புடனும் பார்த்து செல்கின்றனர்.

அனாஸ் தான் தயாரித்த லம்போர்கினி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட அது வைரலானது. பெங்களூருவில் உள்ள லம்போர்கினி ஷோரூம் ஒன்று அனாஸின் உழைப்பை வாழ்த்தி பாராட்டு கடிதமும் அனுப்பியது. தற்போது, இந்த காருக்கு மேலும் ரூ. 50,000 செலவழித்து எலக்ட்ரிக் காராக மாற்ற முடிவு செய்துள்ளார். இந்த லம்போர்கினி காரை தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்ட அனுமதியில்லை. ஊருக்குள் திருப்திக்காக ஓட்டிக் கொள்ளலாம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான் போலும்!


Advertisement
திட்டங்கள் விரைவாக நடக்க காரணமாக இருக்கும் ”அப்பாவுக்கு ஜே” நகைச்சுவை பேசிய அமைச்சர் கே.என்.நேரு
புல்லட் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்த வனத்துறை... தனியாக சுற்றிய யானை கூட்டத்தோடு சேர்ந்துள்ளது
தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்
ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவல்... பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து கெஞ்சிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள்
தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகசுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம்
அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தல்.. பள்ளி மாணவிகளை வைத்தே எடுத்துச் செல்வதாக புகார்
நீலகிரியில் உறைபனி துவங்கிய நிலையில் குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement