தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாததால், முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் நேற்று 400 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 105 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில், இன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட தடுப்பூசி மையங்களுக்கு மதியம் 1 மணி வரை ஒருவர் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவில்லை.
இதேபோன்று, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு சிலர் மட்டுமே வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.