பொங்கல் திருநாளை முன்னிட்டு சேலம் அழகாபுரத்தில் எருதாட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இங்குள்ள ரெட்டியூர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். நேற்று கண்ணனூர் மாரியம்மன் கோயில் திடலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் 40க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. எருதாட்ட நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதியிலிருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரெட்டியூர் பகுதியில் திரண்டனர்.