திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில், அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற I A S அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆத்தூர் என்ற கிராமத்தில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பரம், உரியடி உள்ளிட்டவை இடம்
பெற்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், விருப்ப ஓய்வு என்பது தமது தனிப்பட்ட முடிவு என்றும், இதில் நெருக்கடி எதுவும் கிடையாது என்றும் விளக்கம் அளித்தார்.