சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி கலந்து கொண்டார்.
2 நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார். சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இங்குள்ள பாலமுருகன் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.
பின்னர், சப்பானிப்பட்டி என்ற கிராமத்தில் அருந்ததியர் காலனியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டார், அங்கு, பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சக்தி மாரியம்மன்ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் முதலமைச்சர் கலந்து கொண்டார், பிறகு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாமும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.